பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி, பாதம் என் சென்னியதே.
மனதை ஞான நிலைக்கு எழுப்பும் மனோன்மணி தாயின்
செப்பிற்கு உவமை சொல்லும்படியான இரு தனங்களும்
அதன்பாரத்தால் வளைந்த இடையும்
நீண்ட சடை உடைய ஈசன் உண்ட நஞ்சை
தன் கைகளினால் தடுத்து
நஞ்சை அமுதாக்கிய அம்பிகையின்
மென் பாதங்களில் என் தலை இருக்கிறது.
