அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்,
மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே.
வேறு யாரும் அறியாத மறையின் இரகசியத்தை நான் அறிந்தேன்;
அங்ஙனம் அறிந்தமையால் அதுகொண்டு நின் திருவடியிடத்தே அடைந்தேன்;
நின் அடியார்கள் பெருமையை எண்ணாத பாவம் மிக்க மனம் காரணமாகக்
குப்புற விழும் நரக லோகத்தின் தொடர்புடைய மனிதரை அஞ்சி விலகினேன்
நின் திருவடிக்கண் அடைக்கலம் புகுதல்
எல்லா நன்மைகளையும் கூட்டுவிக்கும் என்ற உண்மையை அறிந்தேன்
