உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி, அபிராமி என்றன் விழுத்துணையே.
உதய கால சூரியனின் கிரகணங்களின் நிறத்தை ஒத்த
உச்சித் திலகம் போன்று யோகியரின் ஞானியரின்
நெற்றியின் நடுவே மாணிக்கம் போன்று ஒளிர்பவளே!
அதுமட்டுமல்லாது மாதுளம் பூவின் நிறத்தையும் ஒத்தவளே
தாமரை மலரில் அமர்ந்த தேவியால் துதிக்கப்படும் அபிராமியே
மின்னலை போன்ற தோற்றம் அழகிய குங்கும வர்ணம் கொண்ட உடலை உடைய அபிராமியே
உன் விழியின் பார்வை துணையே
என் வாழ்வெனும் பயணம் முழுவதற்கும் துணை
