ப்ராணனே அமுதம் என்கிறது ப்ரச்ன உபநிடதம்.
சூரியனாகச், சந்திரனாக, பஞ்ச பூதங்களாக விளங்குவது ப்ராணனே என்று அது கூறுகிறது.
ஆணில் விந்துவாகவும், பெண்ணில் கருவாகவும் விளங்குவது ப்ராணனே என்று கூறுகிறது.
பெறறோரின் சாயலில் பிள்ளையாகப் பிறப்பதும், அந்த உடலில் உயிராக நின்று உலகை அனுபவிப்பதும்,
அதற்காகப் புலன்களை இயக்குவதும் ப்ராணனே என்பது கோட்பாடு.
ப்ராணன் ஆன்மாவிலிருந்து தோன்றியது. மனிதனும் நிழலும் போல ஆன்மாவும் ப்ராணனும் பிரிக்க முடியாதது.
ப்ராணன் ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது.
அது தன் ஆசைகளுக்கேற்ற உடலைத் தோற்றுவித்துக் கொள்கிறது.
