மன்னருக்கு ஆத்திரம் வந்தது. “நானே புலியை வீழ்த்தியிருப்பேன். உன்னை யார் அம்பு விடச் சொன்னது?” என்று கோபமாகக் கேட்டார்.
இல்லை மன்னா, அந்தப் புலி உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொல்லப் பார்த்தது…” என்று வேடன் முடிப்பதற்குள் மன்னர் குறுக்கிட்டார்.
இதற்கு மேல் எதுவும் பேசாதே” என்று கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் மன்னர்.
மறுநாளே வேடன் கைது செய்யப்பட்டார். மந்திரியும் வேடனும் அருகருகே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
மந்திரி வேடனிடம் பேசி, அவர் சிறைக்கு வந்த கதையைக் கேட்டறிந்தார். அவருக்காக வருந்தினார்.
சில தினங்களுக்குப் பிறகு, மந்திரியும் வேடனும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டனர்.
மன்னர் இவர்களைப் பார்த்து, “சாட்சி தேவைப்படாத அளவுக்கு இருவரின் குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது,
மந்திரி தன் பேச்சின் மூலம் என் திறமையைக் குறைத்து மதிப்பிட்டார்;
வேடனோ தனது செயலின் மூலம் என் திறமையைக் குறைத்து மதிப்பிட்டார்.
மந்திரியாருக்கு ஆயுள் முழுக்கச் சிறையில் இருக்கும் தண்டனையும், வேடனுக்கு மரண தண்டனையும் விதிக்கிறேன்” என்றார்.
அரசவையே மெளனம் காத்தது.
தான் நடுநிலை தவறாதவன் என்று காட்டிக்கொள்ள விரும்பிய மன்னர்
இறுதியாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்றார்.
வாய்ப்பைத் தவறவிட விரும்பாத மந்திரி, “முட்டாளுக்கு அறிவுரை வழங்காதே” என்றார்.
இதைக் கேட்ட வேடன், “முட்டாளுக்கு உதவி செய்யாதே” என்றார்.
மன்னர் ஒரு நொடி திகைத்தாலும், உடனே தனது தவறை உணர்ந்தார்.
இருவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். தன் தவறுக்காக மன்னிப்பும் கேட்டார்.
