ஒரு அரசன், ஞானியிடம் “என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை” என்றான்.
உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?” என்று ஞானி கேட்டார்.
என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை.
முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.
இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை” என்றான்.
அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு” என்றார் ஞானி.
எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன்.
நீ என்ன செய்வாய்” என்றார் ஞானி.
நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்” என்றான் அரசன்.
எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட
என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.
அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.
நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்” என்றார்.
சரி” என்றான் மன்னன்
