பஞ்ச பூதங்களால் ஆன மனிதனுக்கு அந்த பூதத்தினுடைய தன்மையே
மனிதன் திறமாகிறது. மனிதனின் திறமையாகிறது.
பூமி — இது போல உறுதி உடையதாக மனமும் உடலும் வேண்டும்.
நீர் — இது போல நினைவுகள் நம்மை இழுத்து செல்கின்றது.
ஈரம் என்ற அன்பு, கருணை, தியாகம் கொண்டுள்ளது.
நெருப்பு – கோபம், தூய்மை கொண்டுள்ளது.
வாயு – போல கண்ணுக்கு தெரியாத கற்பனைகளில் சிறகடித்து பறக்கின்றது,
மன காயங்களுக்கு மருந்திட்டு ஆற்றுகின்றது.
ஆகாயம் – போல பரந்து விரிந்து எல்லா எண்ணங்களுக்கும், நினைவுகளுக்கும் இடம் தருகின்றது.
இதில், அண்டசராசரங்கள், ஆசாபாசங்கள் அடைந்த அனுபவங்கள்
முக்காலங்கள் முக்குணங்கள் அனைத்தும் மனதில் இருக்கின்றது.