நாம் ஒன்றை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்
நாம் செய்யும் பணிகள் தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட
நமக்கு உடல் பலம் முக்கியம் என்று
கவனித்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு புரியவரும்
உடல் பலம் குறைந்தவர்கள் தன் நம்பிக்கை குறைவாக இருப்பவர்களாக இருப்பார்கள்
அதனால் உங்கள் பணிகளை எப்போதும் நீங்கள் உற்சாகமாக செய்ய
நல்ல சத்துள்ள உணவுகளையும், நல்ல உடற்பயிற்ச்சியையும் செய்யுங்கள்
அது உங்களுக்கு உங்களது பணிகளை தொடர்ந்து உற்சாகமாய் செய்ய உதவி செய்யும்
இன்னுமொரு விஷயம்
உடல் நலம் இல்லாத சூழ்நிலை நமக்கு உண்டாகும் போது
எதிர் காலத்தை பற்றிய தேவையில்லா பயம் நமக்குள் உருவாவதை நாம் காணலாம்.
உடல் பலமாயும் ஆரோக்கியமாகவும் இருக்கும் போது
எதிர் கால பயங்கள் நம்மை அண்டுவதில்லை
அதனால் நீங்கள் செய்யும் உங்கள் பணிகளுக்கு ஏற்ற
உடற்பயிற்சியினை தொடர்ந்து செய்து உடலை ஆரோக்கியத்தோடும் பலத்தோடும் வைத்துக்கொள்ளங்கள்
அப்படி இருக்கும் போது
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்.