என்னதான் வேதங்கள் அநாதியாய் இருந்தாலும்
மனிதனால் தான் வெளியுலகத்திற்க்கு வந்தது.
இதில் மனிதனின் எண்ணங்களும் போக்கும் மாற, மாற மனிதனால்
வெளியுலகிற்க்கு அறிமுகப் படுத்தப்பட்ட வேதங்களிலும் மாறுதல்கள் உருவானது
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நமக்கு அதை புலப்படுத்தும்
முதலாவது தோன்றிய ரிக் வேதத்தில் இல்லாத யாகாதி கர்மாக்கள் அதர்வண வேதத்தில் இருப்பதை நாம் பார்க்கலாம்.
துதியும், பக்தியும் இருந்த காலம் போய் யாகமும், பூஜையும், பூஜை முறையும் வேதத்தைவிட முக்கியத்துவம் பெற்ற காலமும் வந்தது
அப்போது யாகாதி கர்மங்களை செய்பவன் இறைவனுக்கு சமமானான்.
ஒரு நிலையில் அவன் இறைவனாகவே பாவிக்கப்பட்டான்
அதுதான் மனித மனதின் கர்வத்தின் உச்சம் எனலாம்.
எந்த உச்சத்திற்க்கும் வீழ்ச்சி உண்டு என்ற இயற்கையின் விதிபடி
தற்காலத்தில் அவை பெருமளவு வீழ்ச்சியில் இருப்பதை காண்கிறோம்.
இது இதோடு நிற்கட்டும். இனி உபநிடதங்களுக்குள் வருவோம்.