சிராயுதயில பிந்து ரூபம் …..
அன்னபக்ஷிகள் வாத்துக்கள் முதலியது
சம்பூரணமாயும் தாமரைக்காய் பூ
முதலியது நிறைந்த தடாகத்தை போலும்,
சத்திரம், சாமரம், தோரணம் இவைகளைப்போல்
தோணினாலும் அந்த ரோகி சிராயுவாயிருப்பான்.
பூததோஷ தயில பிந்து ரூபம் …..
தயிதலபிந்துவில் எருக்கன் செடிப்போல் தோன்றினால்
அந்த புருஷனுக்கு சாகினிமோகினி முதலியவைகளால்
தோஷம் சம்பவித்ததென்று அறியவேண்டியது.
கிரஹதேவதா தோஷ ரூபம் …..
புருஷாகாரமாய் தோன்றுமாகில் வீட்டின் தேவதைகளால்
தோஷம் உண்டானதென்று அறியவேண்டியது.