இறக்க யாருக்கு விருப்பம் ?
யாருக்குமே விருப்பம் இல்லை.
ஆனால்
விரும்பாத ஒன்றை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில்தானே இருக்கிறோம்.
விரும்பாத ஒன்றை செய்து தீர வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு.
கால அளவுகள் வேறு அவ்வளவுதான்.
இறப்பை விரும்ப வேண்டுமென்றால்
முதலில் அதை படிக்க வேண்டும்.
இறப்பை படிப்பது எப்படி
யார் சொல்லி தருவார்கள்
அப்படியே சொல்லித்தந்தாலும் நமக்கு அது புரியுமா
நாம் இருக்கும் சூழ்நிலை
நாம் பெற்ற அறிவு
சொல்லித்தருவதை ஒத்துக்கொள்ளுமா
பெரிய கேள்வி தான்
ஆனால் விடை
இதைத்தான்
பெரியவர்கள் சொன்ன
கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
என்பதா?