எத்தகைய சிற்றறிவை மனிதன் பெற்றிருக்கிறான்?
அவனுக்கு வேண்டுவது ஒன்றாயிருக்க,
அவன் கேட்பது வேரொன்றாயிருகிறது
பல சந்தர்ப்பங்களில் அவன் பிள்ளையார் பிடிக்கத் தொடங்குகிறான்.
அது குரங்காய் முடிகிறது.
ஆகவே நம் விருப்பங்கள் எல்லாவற்றையும் இறைவனது பாதங்களில் ஒப்படைத்தலே சாலச் சிறந்தது.
நமக்கு எவை மிக நல்லவையோ அவற்றையே இறைவன் நமக்கு அருள்வான்.
ஆனால், ஒருவன் பக்தி பெருகுவதற்கும் பற்று அற்றுப் போவதற்கும் பிரார்த்திக்கலாம்.
அவை மேற் கூறிய இச்சைகளின் பாற்படா.