சப்ததிவசாந்தரமிருத்யு நாடி …..
தேகமானது சாபவர்ஜிதமா இருக்கும்போது நாடிதனது கதியை தவிர்த்து க்ஷணகாலத்தில் தீவிரமாயும்,
க்ஷணகாலத்தில் சாந்தமாயும் நடையுள்ளதாயும் இருக்குமாகில் அவர் ஒரு வாரத்திற்குள்ளாக மரிப்பான்.
மூன்றா நாள் மிருத்தியு நாடி …..
அதிகோரமான சுரம் அடிக்கும்போது நாடியானது பனிக்கட்டிப்போலும், சீதளமாயும் இருக்கிறதல்லாமலும்
திரிதோஷ ஸ்பரிச சம்பந்தம் பெற்றிருந்தால் அந்த நாடியையுடைய மனிதன் மூன்று நாளுக்குள்ளாக
மரணமடைவான்.
நாலா நாளில் மரணமடையும் நாடி லக்ஷணம் ….
வலது பாதத்தில் ஒரு நாடி அதி தீரவிரமாய் நடக்கிறதுடன் முகத்திலும் நாடி நடந்துக் கொண்டிருந்தால்
அவன் நாலு நாளைக்குள்ளாக மரணமடைவான்.
பன்னிரெண்டு ஜாமத்திற்க்குள் மரண நாடி லக்ஷணம் …..
நாடியானது வண்டைப்போல் கிர்ரென்று ஒடிக் கொண்டும் புஜம் வரையிலும் நடந்துக்கொண்டும்
விரல்களில் நடக்காமலும் யாருக்கு இம்மாதிரி நாடி நடக்குமோ அவன் பன்னிரெண்டு சாமத்திற்குள்
மரணமடைவான்.
திநாந்தர மிருத்தியு நாடி லக்ஷணம் …..
நாடியானது முகத்தில் கோடை காலத்து மின்னலைப்போல் அதி தீவிரமாய் நின்று நின்று நடக்குமாகில்,
அவன் ஒரு நாள் முழுதும் இருந்து மறு நாள் உதயத்தில் மரணமடைவான்.