ஆட்சிமுறை அமைப்பின் அங்கங்களாக இருப்பது சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதிமன்ற
அமைப்பு, ஆகியவை. சட்டங்களை இயற்ற சட்டமன்றமும், சட்டங்களை செயல்படுத்த
அதிகாரவர்க்கத்தை உள்ளடக்கியதாக நிர்வாகமும் சட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண
நீதிமன்றங்களும் உள்ளன. இப்போது இருக்கும் நீதிமன்ற அமைப்பின் குறைபாட்டுப்
புள்ளிவிவரங்கள் நிலைதடுமாற வைப்பவை. இருபதாயிரத்துக்கும் மேலான வழக்குகள்
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 30
லட்சம் வழக்குகள் உயர்நீதி மன்றங்களிலும், மனத்தை மரத்துப் போகச் செய்யும் அளவில்
சுமார் 2 கோடியே 20 லட்சம் வழக்குகள் மீதியுள்ள நீதிமன்றகளிலும் நிலுவையில் உள்ளன.
இவ்வளவு ஏன், உயர்நீதிமன்றங்களில் 1950ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்கூட இன்றும்
உள்ளன. தாமதாக நீதி கிடைப்பது நீதி மறுக்கப்பட்டதற்குச் சமம் என்ற ஆழமான கவலை
ஒருபுறம் என்றாலும், வழக்குகளின் தேக்கம் வியாபாரத் துறையின் மீதும் கேடான
விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடியாதபோது,
நடந்தேறும் ஆற்றல் உள்ள வர்த்தகங்கள் நடைபெறாமல் போகின்றன. அதனால் நாட்டின்
பொருளாதாரம் பெருத்த நஷ்டம் அடைகிறது.