தம்பி இப்ப நாம இருக்குற இந்த ரூமுக்குள்ள ஒரு பயித்தியகாரன் வந்து
இந்த ரூம் பூரா தேவதைக இருக்காங்க அதுலயும் உண்ண பாத்து
கடவுள்ன்னு சொன்னா அது பிரமாணமாகாது. நான் சொல்லறது கரெக்ட்டா
கரெக்ட்
ஏன்,
அவன் புத்திசரியில்லாதவன்,
அப்ப சரி, பிரமாணம் அப்படின்னு சொல்லறவங்க
அறிவோட ,புத்தியும் இருக்கிறவங்களா இருக்கனும்.
சரி தானே
சரி தான்
இப்ப அடுத்தது கடந்த கால அறிவுக்கு முரண்படாம இருக்கனும்
இதுல என்ன முரண்பாடு இருக்கு
என்னை கடவுள்னா
அப்ப இரண்டாவது RULE-ம் OUT ஆயிருச்சு.
முணாவது சொல்பவனோட குணம்
இது முக்கியமில்லை அப்படீன்னு சில பெரிய உலக அறிவாளிங்க சொல்லுவாங்க
ஆனா அந்த கருத்து இந்த விஷயத்துக்கு ஒத்துவராது.