ஒரு செயல் செய்யப்படும் போது அந்த செயலைப்பற்றிய நினைவு வருவது முதல்படி.
பின் அதை செயலாக்கத்திற்க்கு கொண்டு வருவது இரண்டாம் படி.
அந்த செயலினால் உண்டாகும் விளைவு என்பது மூன்றாம் படி.
நினைவு வரும் இடம் மனம்
அதை செயலாக்கத்துக்கு கொண்டு வரும் போது
அதனுடன் உடல் இணைகிறது.
அதன் விளைவுகள் எனும் போது சில சமயங்களில் மனம் மட்டும் அனுபவிக்கிறது
பலசமயங்களில் உடலும் மனமும் அனுபவிக்கிறது.
இதை நாம் கர்மா என்கிறோம்.
இதை பெரியவர்கள் மனஸா – வாஸா – கர்மா என்று நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.
இதிலிருந்து கர்மாவின் விதை மனம் என்று புரிந்து கொண்டோம்.
மனம் இயங்கவில்லை என்றால் கர்மா இருக்காது.
அதனால் தான் முன்னோர்கள் சும்மா இருப்பதே சுகம் என்றார்கள்.
Informative