பிரம்ம லோக பிராப்திக்கு வேண்டிய உபாசனை செய்தவர்களை சூஷ்ம ரூபமாகிய சுஷம்னா நாடி மூலாதாரத்திலிருந்து இடகலை பிங்கலையின் மத்தியமாக சூக்ஷ்மரூபத்துடன் நடுமுதுகிலுள்ள வீணாதண்டமென்கிற எலும்பின் மார்க்கமாய் சஹஸ்ராரத்தையும் பிரம்மாந்திர மூலமாய் சூரியமண்டலம் வரையிலும் வியாபித்து பிரம்மலோகத்தை அடையச் செய்யும். பர பிரம்ம நிலை ….. சகல பிரபஞ்சாத்மக பரஞ்சோதி சொரூபியாகிய பர பிரம்மம் இந்த சுஷம்னா நாடியில் வசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நாடி அநேக மார்க்கங்களை உண்டாக்கி அனேக முகங்களுடன் வியாபித்திருக்கும். இந்த நாடிதான் சுத்த பரப்பிரம்மத்திற்கு ரூபமாய் இருக்கும். சூரிய சந்திர அக்கினி பரமேஸ்வரர்களுக்கும் பிரிதிவியாதி பஞ்சபூதங்களுக்கும் பதிநாலு புவனங்களுக்கும், தச திக்குகளுக்கும், தர்ம க்ஷத்திரங்களுக்கும், ஏழுசாகரங்களுக்கும், மேரு முதலிய பர்வதங்களுக்கும், ரத்னாதி சிலைகளுக்கும் ஏழு தீவுகளுக்கும், கங்காதி நதிகளுக்கும், வேதங்களுக்கும், சகல சாஸ்திரங்களுக்கும் அறுபத்தினாலு வித்தைகளுக்கும், நான்கு வர்ணங்களுக்கும், அகாராதி அக்ஷரங்களுக்கும், உதாத்தாதி சுவரங்களுக்கும், ஏழுகோடி மஹாமந்திரங்களுக்கும், புராணங்களுக்கும், முக்குணங்களுக்கும் மஹதாதி தத்துவங்களுக்கும், ஜீவனுக்கும், க்ஷத்திரக்கியனுக்கும், பிராணாதி பஞ்ச வாயுக்களுக்கும் நாகாதி உபவாயுவுகளுக்கும் சமஸ்த பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாய் இருக்கிறது. Category: மருத்துவம்By admin@powerathmaMay 5, 2021Leave a commentTags: இடகலைசுஷம்னா நாடிசூரியமண்டலம்தத்துவங்கள்பிங்கலைபிரம்மலோகம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 27NextNext post:பராசரா ஹோரை 6-வது அத்தியாயம். குளிகனின் துவாதச பாவ பலன். 1Related Postsஅனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82July 25, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 81July 24, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 80July 23, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 79July 22, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 78July 21, 2024செவ்வாய் 12January 22, 2024