தேஹ வியாபக நாடிகள் ….. மூலாதாரத்தில் ஆசிரயித்து தலைமுதல் பாதம் வரையிலும் வியாபித்து இருக்கும் எழுநூறு நாடிகளால் மனித தேகமானது மிருதங்கத்தை சருமத்தின் வாறினால் கட்டப்பட்டிருப்பது போல் கட்டப்பட்டு இருக்கிறது. முக்கிய நாடிகள் ….. மேல் கூறிய எழுநூறு நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழிமுனை, சரஸ்வதி, வாருணி, பூஷா, ஹஸ்திஜிம்ஹ, யசஸ்வினி, விஸ்வோதரி, குஹ¨ சங்சினி, பயிஸ்வினீ, அலம்புசா, காந்தாரி என்னும் பதிநாலு நாடிகள் முக்கியமானவை, இவைகள் பிராணவாஹினிகளாய் ஜீவகோசத்தில் வியாபித்து இருக்கின்றதுகள். இந்த பதிநாலுநாடிகளில் பத்து நாடிகள் முக்கியமானவை. நாடி சஞ்சாரங்கள் ….. இடகலை, பிங்கலை, சுழிமுனை, என்கிற மூன்றுநாடிகள் சரீரத்தில் ஊர்த்துவ காமினிகள்,காந்தாரி, ஹத்திஜிம்மை, என்கிற நாடிகள் கரங்கள் முதலியவை நீட்டவும், முடக்கவும் உபயோகமானவை. அலம்புசா, யசஸ்வினி என்னும் நாடிகள் வலது அங்கத்திலும், குஹ¨ சங்கினி, என்கிற நாடிகள் இடது அங்கத்திலும் வியாபித்து இருக்கிறது. இந்த பத்து நாடிகளில் மத்தியமாயிருக்கும் பூஜை என்கிற பிரசூதிகா நாடி சகல காரியங்களையும் செய்வும், சரஸ்வதி, வாருணி, விஸ்வோதரி, பயஸ்வினி என்னும் நாலு நாடிகளை குறித்து ஒன்றும் சொல்லப் படவில்லை. Category: மருத்துவம்By admin@powerathmaApril 1, 2021Leave a commentTags: DIVINEPOWERAATHMAA.COMஇடகலைசரஸ்வதிசுழிமுனைநாடி சஞ்சாரங்கள்நாடிகள்பிங்கலை Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:பொருளாதார வளர்ச்சிNextNext post:நிலத்தின் உயிர் எது? 2Related Postsஅனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82July 25, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 81July 24, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 80July 23, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 79July 22, 2024அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 78July 21, 2024செவ்வாய் 12January 22, 2024