அமைதியை தேடும் மனிதன் முதலில்
புரிந்துகொள்ள வேண்டிய து
ஒன்று
அன்பு
அடுத்தது
மரணம்
இவை இரண்டையும் மனிதன் புரிந்துகொள்ளும் போது
அவனுக்கு பலவிஷயங்கள் தெரிய தொடங்கும்
அதில் சில விஷயங்கள் புரிய த் தொடங்கும்
முக்கியமாக
நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்
சிறுவயது முதலே போட்டி மனப்பான்மையோடு வாழ பழக்கப்படுத்தியுள்ளோம்
இதை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
திறந்தமனதோடு ஒப்புக்கொள்ளவும் வேண்டும்
போட்டி என்றாலே வெற்றி என்பது இலக்காகி விடுகிறது
ஏதாவது ஒரு பலவீனமான சந்தர்ப்பத்தில்
நாம் வன்முறையைகைக்கொள்ள தூண்டப்படுகிறோம்
அல்லது
வன்முறையை கையாளுகிறோம்
பின்
அதுவே நமது வாழ்க்கை ஆகிவிடுகிறது
இது தொடரும் போது
ஒரு மிருகத்தனமான வாழ்க்கை நமது இயல்பாகிவிடுகிறது
நாம் இப்படி இருக்கிறோம் என்று சிந்திப்பதும் இல்லை
யாரவது சொன்னால் சிந்திக்க தயாராவதும் இல்லை
விஷயம் இப்படி இருக்கும் போது
இங்கு அன்பு எனும் விதை விழுவது எங்கனம்
அது வளர்ந்து பூத்துக்குலுங்குவது எங்கனம்
அது அதன் மணத்தை பரப்பி
சந்தோஷம் தரும் சாத்தியங்கள் எப்படி ஏற்படும்
விடைகளை தனக்குள் தேடி செல்லும்போது
மீண்டும் மீண்டும் வினாக்களே வருகின்றன
என்ன செய்வது
விடை கிடைக்கும் வரை தேடுவோம்
Post navigation
நமஸ்காரங்க அய்யா
அன்பு மலர்ந்திட என்ன செய்ய வேண்டும்.
Have to accept…
எல்லா நேரங்களிலும்
எல்லா சூழ்நிலைகளிலும்
அனைவரிடமும் அன்பு செலுத்துவது எப்படி அனைவருக்கும் சாத்தியமாகும்.
நீங்கள் இதை
பயிற்சி செய்தது உண்டா திருமதி.காயத்ரி அக்கா ???
Even I m learning slowly..by smile, talking softly, politely, not showing anger just moving away,even I m learning through ayya given topics.i even learnt self respect is important.. that’s it I can say u raja anna.thank you.