இது எதனால்
தொடர்ந்து இன்பம் தர கூடியது மனிதனிடம் _நிறைய இருந்தாலும்
ஒரு கால கட்டத்தில் அவனுக்கு இன்பம் எது தந்ததோ
அதனை சீ சீ என்று ஒதுக்கிறானே இது ஏன்?
இப்படி சிந்தித்துக் கொண்டே போனால்
நாம் வேதங்கள் உபநிஷத்துகளிடம் தான் சென்றடைய வேண்டி இருக்கிறது.
வேறு வழி இல்லை அது பொய்யான கற்பனையாக நமக்கு தோன்றினாலும்
அதில் தான் உண்மையே இருக்கிறது.
இன்னும் சொல்லப் போனால் அதில் மட்டும் தான்
நிரந்தர இன்பம் பற்றியும்
அதனை அடையும் வழி வகைகளைப் பற்றியும் இருக்கிறது.
