வானின் நட்சத்திரங்களை விஞ்ஞானி கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான்.
ஞானியின் உள்ளத்தில் வானின் நட்சத்திரங்கள் இடம் கொள்ளுகின்றன
இவை இரண்டும் என்றுமே ஒன்றாகாது.
எப்போதுமே எந்த துறையிலுமே
அரை வேக்காடுகளினால், தான் கோளாறு உண்டாகிறது.
ஆத்ம தரிசனத்தின் முன்னனியில்
கருணை, அன்பு மிக முக்கியமானது
ஆனால் ஆத்ம தரிசனத்தின் அரை வேக்காடான நிலையில்
மத வாதம் கருணையற்ற ரணகளங்களை சரித்திரத்தில் ஏற்படுத்துகிறது.
