ஒரு அரசன் யார் பேச்சையும் கேட்காத, தலைக்கனம் பிடித்தவர். ஒரு நாள் அரசவையில்,
“மந்திரி, நான் வேட்டைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றார்.
நல்லது மன்னா, நான் நமது வீரர்களைத் தயார் படுத்துகிறேன்.”
எதுக்கு? நான் ஒருவனே பெரும் படைக்குச் சமமானவன் தானே?”
மன்னரின் பெருமைப் பேச்சைப் புத்திசாலித்தனமாகத் தான் சமாளிக்க வேண்டும் என்று
தெரிந்து வைத்திருந்த மந்திரி தொடர்ந்தார்
. “உண்மைதான் மன்னா. மிகப் பெரிய மனிதப் படையைத் தாங்கள் ஒருவரே வீழ்த்த வாய்ப்புள்ளது.
ஆனால், விலங்குகள் வேறு. நம்மைவிடப் பல மடங்கு பலம் வாய்ந்தவை.
எந்தத் திசையிலிருந்து தாக்கும் என்று கணிக்க முடியாதவை.
அவை மன்னர், சாமானியர் என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பதில்லை.
யாராக இருந்தாலும் அவற்றுக்கு இரைதான்.”
மந்திரி முடிப்பதற்குள் மன்னர் குரலை உயர்த்தி, “யாரங்கே?
என் திறமையைக் குறைத்து மதிப்பிட்ட இந்த மந்திரியை உடனே கைது செய்யுங்கள்” என்று கர்ஜித்தார்.
மந்திரி திகைத்துவிட்டார். உடனே சிறையிலும் அடைக்கப்பட்டார்.
மறுநாள் யார் துணையும் இன்றி, தன்னந்தனியாகக் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார் மன்னர்.
நேரம்தான் கடந்தது. அவர் எதிர்பார்த்ததுபோல் சிங்கமோ புலியோ அகப்படவில்லை.
வேட்டையாடாமல் திரும்பக் கூடாது என்று நினைத்ததால், காட்டின் உட்புறம் நோக்கித் தன் குதிரையைச் செலுத்தினார்.
அவர் நினைத்ததைப்போல் ஒரு புலி தென்பட்டது.
அவர் கண் இமைக்கும் நொடியில் அந்தப் புலி மன்னர் மீது பாய்ந்தது.
அதே நேரத்தில் புலியின் மீது சக்தி வாய்ந்த அம்பு ஒன்று பாய்ந்து, புலியை வீழ்த்தியது.
மன்னருக்கு ஒரு நொடி என்ன நடந்தது என்று புரியவில்லை.
புதருக்குப் பின்னால் மறைந்திருந்த வேடன் வெளியேறி, மன்னரை வணங்கினார்.
தனக்கு மன்னர் பாராட்டுத் தெரிவிப்பார், அவர் உயிரைக் காப்பாற்றியதற்காகப்
பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுப்பார் என்று எண்ணியபடியே பெருமிதத்தோடு நின்றார்.
