குல தேவதை தோஷ தயில பிந்து லக்ஷணம் …..
புருஷாகாரமாய் தோன்றுமாகில் தன்குல
தேவதைகளின் பிரகோபத்தினால் வியாதி
சம்பவித்ததென்று அறியவேண்டியது.
சுகதயில பிந்து லக்ஷணம் …..
தயில பிந்துவில் மண்டபம் போல் தோணுமாகில்
வியாதி கிடையாதென்று அறியவேண்டியது.
வியாதி நிவர்த்தி குறி …..
பூர்வ திசையாக தயிலபிந்து பாய்ந்து பரவினால்
வியாதி நீங்கிவிட்டதென்று அறியவும்.