இக்கால வாழ்க்கை முறையில்
வாழ்க்கைக்கு உண்டான மதிப்புகள் என்று எதுவும் இல்லை
வாழ்க்கைக்கு உண்டான முக்கிய விஷயமான
நியாயம், அநியாயம் என்ற ஒன்றும் இல்லை
ஒரு மூர்க்கத்தனமான ஒட்டப்பந்தயத்தில்
யார் ஜெயிக்கின்றானோ
அவன் வெற்றியே எதையும் ஞாயப்படுத்தி காட்டுகிறது.
வெற்றி அடைந்தவன் நிர்ணயிப்பதே
வாழ்க்கை தர்மம்.
என்ன செய்வது
இது சரியா என்று கூட யோசிக்கும் நிலையில் நாம் இல்லையே
நம்மை சுற்றி நடப்பவைகளில் எத்தனை விஷயங்கள்
நம் சிந்தனைக்கும் நாம் கற்றதிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது
வெற்றியாளன் என்பவன் யார்
நமக்கு சட்டமிட அவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது
இப்படி சிந்திக்கும் போது
எத்தனை வினாக்கள்
ஆனால் விடை
கேள்விகள்தான்
உண்மையில் இப்படி கேள்விகள் கூட நம்மிடம் இல்லை
என்ன செய்வது
நம் கல்வி அல்லது நாம் கல்வியை புரிந்து கொண்ட விதம் அப்படி
என்ன செய்வது
அதனாலேயே
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப் பொருள் மெய் பொருள் காண்பது அறிவு
என்பதை புரிந்து கொள்ளாமலேயே விட்டுவிட்டோம்
அதன் விளைவு நம்முடைய சிந்தனை இல்லாத வாழ்க்கை முறை