உண்ணும் சுகத்தை இன்னொரு விதமாகப் பெரும்பாலாகப் பெற முயலுகிறார்கள்.
சுகமடைந்ததாக மனப்பால் குடிக்கிறார்கள். இயற்கைக்கு விரோதமான முறையில் பழக்கப்பட்ட நாக்கை
பிரதிநிதியாகக் கொண்டு, வலிவற்ற மனம், தீயதாய் மாறிய புலன்களை ஆதாரமாக நிறுத்தி,
வலிவு, வளர்ச்சி, ஆரோக்கியம் என்ற தொகுதிகளை மறந்து, தேவை மீறி, கால தேச வர்த்தமானங்களுக்கு
கட்டுப்படாமல் வாழ்வது, கண்டதைக் கண்டபடி சாப்பிடுவதற்கென்றே! என்ற முறையில் வாழ்ந்து
அவ்வுண்ணும் சுகத்தை அனுபவிப்பது ஒரு வழியாகும்.
இது தீயதில் பிறந்து (சுகம்) இல்லாத பொழுது இருப்பதாக ஏமாற்றி,
எதிர்காலத்தில் துன்பமே பலனாகத் தரும்சுகமாகும்.
உண்மையில் இது சுகமல்ல!
சுகம் போன்ற வேஷம் கொண்ட ஒரு உணர்ச்சி!
நிழல் சுகம், கானல் சுகம், பொய்ச் சுகம், கணச் சுகம், கெட்ட சுகம் என்றும் இதைக் குறிக்கலாம்.
சுகம் என்ற பெயரால் இதை எம்முறையில் குறித்தாலும் தகாததாகும்.
It helps me to understand different levels of category are there in sugam..thank you ayya