ஊர்கூடி செக்கு தள்ளினால்தான் எண்ணை உண்டு என்று காத்திருக்க முடியுமா?
முடியும் முடியனும் அதுதான் ஜனநாயகம்
ஒரே கொடி, ஒரே தேசம், ஒரே சாம்ராஜ்யம், ஒரே இனம், ஒரே கொள்கை, ஒரே மொழி இது சாத்தியமா
என்பதைவிட நம் நாட்டிற்க்கு இது சரியானதா? தேவைதானா ?
அப்படின்னு யோசிகிச்சா தேவைஇல்லைன்னு சொல்லறதுதான் சரியான பதில்
நாட்டுப்பற்று இல்லைன்னு அர்த்தம் இல்லை இதுக்கு
சரியான கோணத்துல விஷயத்தை சரியா பாக்கறோம் அப்படிங்கறது தான் பதில்
நம் நாட்டில் அது நிறைவேற கூடாது காலக் கொடுமையினால் நிறைவேறினாலும் நிலைத்து இருக்காது
நிலைத்திருந்தாலும் நாட்டுக்கு நல் வாழ்வு தராது.
பல ஜாதிகளும், பல மதங்களும், பல கொள்கைகளும்,பல கலாச்சாரங்களும்உள்ள நம் நாட்டில்
ஏகாதிபத்திய அரசியல் முறை இருக்ககூடாது.
ஏகாதிபத்தியத்தின் ஆட்சியாளன் தன் ஜாதி, தன்மதம், தன் ஊர், தன் கொள்கை என்று
மற்றவர்களின் உரிமைகளை மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ நசுக்கி விடுவான்
மிதிபடுபவர்களின் உரிமை குரலை குறுகிய மனப்பான்மையென்று கூசாமல் கூறிவிடுவான்
அப்படி பட்ட ஆட்சியாளன் தனக்கு வேண்டிய ஒரு சிலருக்கு வேண்டி
நாட்டின் வளத்தை செல்வத்தை அவர்களுக்கு தாரை வார்க்க தயங்க மாட்டான்
கேட்டால் எல்லாம் நாட்டின் நன்மைக்கு தான் என்றும்
நாட்டு மக்களுக்கு வேண்டிதான் என்றும் கூசாமல் சொல்லுவான்.
Yes it is modi Ji….always says I m doing for the people…