வெட்டாதீர்கள் – மழை தருவேன் என்கிறது மரம்
வெட்டுங்கள் – மழை நீரை சேமிப்பேன் என்கிறது குளம்
ஆன்லைனில் கிடைக்கும் அன்பும்
ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை.
தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறது.
கல்வி கற்க புத்தகங்களை விட நோட்டுக்களேஅதிகம் தேவைப்படுகின்றன
நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில்.
நம் கோபத்தை காட்டுவதை விட
சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி..
பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை
காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம்.
காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்
.திருக்குறளை…
வாழறதுக்காக படிச்சவங்கள விட.
ரெண்டு மார்க் வாங்குறதுக்காக படிச்சவங்க’தான் அதிக பேரு
அனுபவத்தை
எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது
அதற்கு
பல தோல்விகளும்,
சில துரோகிகளும் தேவை