Skip to content
எப்போதும் எல்லாம் தவறு கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப் படுகிறதோ
அதுதான் சரியானது
தவறுகளின் பாதைதான் சக்தியத்தின் பாதை.
மனித குலத்திற்க்கு இது என்ன சொல்ல வருகிறது
இதிலிருந்து மனிதன் அல்லது மனித குலம் என்ன புரிந்து கொள்வது.
அப்படி புரிந்து கொள்வதால் என்ன பயன்
சிந்திக்க வேண்டும்.
சிந்திக்க விருப்பு வெறுப்பு இல்லாத மனநிலை தேவைபடுகிறது.
மனமானது
விருப்பு, வெறுப்பு , சுகம், துக்கம், சரி, தவறு என்று
பற்றியபடியே மனம் இயங்கிக் கொண்டிருக்கும் போது,
நடு நிலையான மனநிலையை அடைவது எங்கனம்,
அதிலும்
வெற்றி, தோல்வி, எனும் நிலையும் இணைந்திருக்கும் போது
சரியாக சிந்திப்பது சாத்தியமா?
ஏதாவது ஒன்றில் படர்ந்து செல்லுவதே மனதின் இயக்கமாய் இருக்கிறது
இதிலிருந்து மாறி நிற்பது எங்கனம்,.
எந்த பயிற்ச்சி
எந்த அறிவு
இதற்க்கு உதவும்
என் வரையில் எல்லாம் சரியாய் இருப்பதில்
தவறு காணுவதென்பது எங்கனம்,.
என் வரையில் சரியாய் இருப்பது
பிறர் அளவில் தவறாய் பல சமயம் அமைந்து விடுகிறதே
அப்போது என்னில் இல்லாத ஒன்றை
நான் சரி செய்வது எப்படி
பிறரை சரி செய்ய முடியுமா?
அது என்னுடைய வேலைதானா?
அப்படி அதற்க்கு அவசியம் என்ன?
இந்த வினாக்களுக்கு விடையை தேட
எனக்கு எது உதவும்
சிந்திப்பதெல்லாம் என்னை சுற்றியே அமையும் போது
நான் என்ன செய்ய
இங்கு சரி செய்தல் என்பதன் அர்த்தம் என்ன?
அதைவிட முக்கியமானது சத்தியம் என்றால் என்ன?
எத்தனை வினாக்கள் அடுக்டுக்காக
இதில் தவறு, சரி செய்தல்,
சரி, தவறுகளின் அர்த்தம்
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியும்
ஒவ்வொரு செயலுக்கு ஒவ்வொரு மாதிரியும்
அர்த்தம் தருகிறதே என்ன செய்வது
வார்த்தை ஒன்றாக இருந்தாலும்
ஒவ்வொருவருக்கு தக்கபடி.
ஒவ்வொரு காரியத்துக்கு தக்கபடி
ஒவ்வொரு சூழ்நிலைக்கு தக்கபடி
அர்த்தங்கள் மாறுகிறதே,
எதை எப்படி பொருத்துவது,
சிந்திக்க, சிந்திக்க அயற்ச்சியும் ,குழப்பமும் தான் அதிகமாகிறது.
அதற்க்கு ஒரே வழி சிந்திக்காமல் இருத்தல்
அப்போது எந்த குழப்பமும் இல்லை,
இப்படிப்பட்டமுடிவுக்கு தான் வரவேண்டி இருக்கிறது.
இந்த சமயத்தில் எதிலோ படித்த விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது
அது, இதுதான்.
இருவருக்கு வாக்குவாதம்
அதில் ஒருவர் எல்லை மீறி மற்றவரை அறைந்துவிடுகிறார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தார்
அறைந்தது தவறு என வாத பிரதிவாதங்கள் செய்து கொண்டிருந்தனர்.
ஆனால் அறைந்த பின் நடந்தது என்னவென்றால்
அறை வாங்கியவர்க்கு 25 வருடங்களாக கேட்காமல் இருந்த ஒரு காது
கேட்க தொடங்கிவிட்டது.
அறை வாங்கிய நபர் அறைந்த நபருக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்.
இங்கு தவறு என்பது
தவறு சரிசெய்யபடுதல் என்பது
தவறின் பாதை என்பது
சத்தியத்தின் பாதை என்பது,
போன்ற விஷயங்கள் எது
எனக்கு புரியவில்லை.
புரிந்துவர்கள் சொல்லுங்கள்.
Go to Top
It makes me to think and read this again and again.thank you ayya