Skip to content
காமு- வளர்ச்சின்னா என்ன
கோமு- வளர்ச்சின்னா அழிவு
காமு- நீ தப்பா சொல்லரே
கோமு – அப்ப நீ சரியா சொல்லு
காமு- இடைஞ்சலைத்தாண்டுவதுதான் வளர்ச்சி
கோமு- அது இயற்கையை உத்து பாக்காதவங்க சொல்லற வார்த்தை
காமு- நீ ரொம்ப உத்துபாத்துட்டாயோ
கோமு- நான் சொன்னது நமக்கு முன்னாடி பாத்தவங்களோட கருத்து எனக்கு அது சரின்னு படுது
காமு – என்ன நீ இப்படி சொல்லற
கோமு- யோசி புரியும்
காமு- உலகமே வளர்ச்சிக்கு ஆசைப்பட்டு ஓடுது
நீ என்னடான்னா இப்படி சொல்லற
அப்ப அவங்கள்ளாம் முட்டாள்களா
கோமு – நான் அப்படி சொல்லலையே
காமு – வேற எப்படி சொன்ன
கோமு – யோசி அப்படின்னு சொன்னேன்
காமு – வளர்ச்சியிலே என்ன அழிவு
கோமு – நல்லா புரிஞ்சுக்க
ஒன்னு அழிஞ்சாதான் ஒன்னு உருவாகும்
உன்னோட குழந்தை பருவம் அழிஞ்சு தானே வாலிப பருவம் வந்தது
வாலிப பருவம் அழிஞ்சு தானே முதுமை பருவம் வந்தது
எத்தனை வேகமா வளர்ச்சி இருக்கோ
அத்தனை வேகமா அழிவும் இருக்கும்
இது புருஞ்சுதுன்னாலே நிதானம் வந்துரும்
நிதானம் வந்தா கம்பீரம் வந்துரும்
கம்பீரம் வந்தா எல்லாம் அழகா இருக்கும்
நீங்கல்லாம் சொல்லற வளர்ச்சி
ரொம்ப சீக்கிரமான அழிவுக்கு
நம்மை இழுத்துட்டு போறதை புரியாம இருக்கீங்க
அவ்வளதுதான்
என்னால சொல்லமுடியும்
இதை
முடிஞ்சா உத்துப்பாரு
சிந்திச்சு உணரப்பாரு
Go to Top
It is making me to think…thank you ayya
வணக்கம் அந்த கால வளர்ச்சி எல்லாம் நமக்கு சுட்டுப்போட்டாலும் வராது இது தான் உண்மை