ஜோதிட சாஸ்திரத்தின் துணைகொண்டு சுப காரியங்கள் செய்வதற்கு உரிய நல்ல வேளையை தேர்ந்தெடுக்கும் போது யோகத்தை கருத்தில் கொண்டே அநேக முகூர்த்தங்கள் அமைக்கப்படுகின்றன. அதாவது நாளுக்கும் நட்சத்திரத்திக்கும் உண்டான உறவின் நிலை கொண்டு உண்டாகும் யோகங்ஙள் நான்கு. அவை அமிர்தயோகம், சித்த யோகம், மரண யோகம், பிரபாலாரிஷ்ட யோகம். இந்த நான்கு யோகங்களில் அமிர்த, சித்த, யோகங்கள் சிறப்பானது. பிரபாலாரிஷ்ட, மரண யோகங்கள் சிறப்பில்லாதது. இன்றைய சூழ்நிலையில் ஜோதிட சாஸ்திரம் அறியாத பலர் கூட இன்று சித்த யோகம் சுப காரியம் செய்யலாம், மரண யோகம் இன்று சுப காரியங்கள் வேண்டாம் என்று சொல்வதை நாம் காண்கிறோம். இது சரியா? சரி என்றால் எந்த விதத்தில் சரி என்பதை அறிவதே இக்கட்டுரையின் நோக்கம். சித்த, அமிர்த யோகங்களில் செய்த காரியங்கள் அனைத்தும் அனைவருக்கும் வெற்றி பெற்று இருக்கிறதா? அல்லது பிரபாலாரிஷ்ட, மரண யோகங்களில் செய்த காரியங்கள் அனைத்தும் தோல்வி பெற்று விட்டதா? என்பதை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். சித்த, அமிர்த யோகங்கள் பொதுவாகத்தான் சொல்லி இருக்கிறார்களே தவிர இந்த நட்சத்திர ராசி லக்னத்தார்க்கு என்று சொல்லவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல அதை நாம் தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அதுதான் சூட்சுமம். சித்த யோகம் நல்லது. எந்தெந்த விஷயங்களுக்கு நல்லது என்கின்ற விவரம் நமக்கு தெரிய வேண்டும். ஏனென்றால் ஞாயிறுடன் கூடிய அஸ்வினி சித்த யோகம். அதன்பின் ஞாயிறுடன் கூடிய பூரம், ஆயில்யம், திருவாதிரை, ரோகிணீ, மிருகசீரிடம் போன்ற இவையும் சித்த யோகம். இவை அனைத்தும் சித்த யோகம் என்கிற பெயரில் தான் ஒன்றே தவிர அதனுடைய இயக்கங்கள் வேறு வேறு ஆகும். எப்படியென்றால் ஞாயிறு-அஸ்வினி, ஞாயிறு-திருவாதிரை இரண்டும் சித்த யோகமே. ஆனால் இவை வேறு வேறு இயல்பில் இயங்கும். அந்த இயக்கம் ஒவ்வொரு நட்சத்திரதாருக்கும், லக்னத்தாருக்கும் மாறுபடும். அது மட்டுமல்ல முகூர்த்த லக்னம் குறிக்கும் போது இதன் நிலையை சரியாய் அறிந்து வைக்காவிட்டால் முகூர்த்த பலனில் முழுமையாய் இருக்கும் விஷயம் நம்மால் அனுபவிக்க முடியாது. நாள் முழுவதும் சித்த யோகம்-அமிர்த யோகம் உண்டென்று நம்பி காரியம் செய்வதால் பலனேதும் இல்லை. பலன் கிடைக்க வேண்டுமென்றால் கீழ்கண்ட அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொண்டு, எந்த காரியத்திற்கு வேண்டி முகூர்த்தம் அமைக்கின்றோம் என்பதையும் கருத்தில் கொண்டு முகூர்த்த லக்னம் குறித்தால் அந்த நேரத்தில் செய்த காரியம் நிச்சயமாக சித்தி அடைந்து ஜெயிக்கும் அதில் சந்தேகம் இல்லை. Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaJanuary 19, 2021Leave a commentTags: அமிர்தயோகம்ஆய்வுசித்த யோகம்நட்சத்திரத்தின் சிறப்புபிரபாலாரிஷ்ட யோகம்மரண யோகம் Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:அர்க்களா பலன் ( ஜெயமுனிமதம் ) 1NextNext post:நட்சத்திரத்தின் சிறப்பு 2Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024