மிதுனம், துலாம், கும்பம்:-
இது சூத்திர பாவ ராசிகள். இதில் ஒன்றில் பிறப்பு லக்னம் அமைந்து
சந்திரனும் லக்கினாதிபதியும் மேற்படி ராசிகளில் ஒன்றின் இருப்பின்
பொறுமையுள்ளவர், குட்ட, குட்ட, குனிபவர் பொறுமையிழந்தால் மனிதனாக செயல்பாடாதவர்.
நிமிர்ந்து நின்றால் யாராலும் வளைக்க முடியாதவர்கள்.
எதிலும் பிந்தி நிற்பவர் தாழ்வு மனப்பான்மை எதற்கும் ஆமாம் சாமி போடும் குணம் உள்ளவர்.
சந்தேகம் வந்துவிட்டால் அதை உறுதி படுத்தாமல் தீர்வு காணாமல், உறக்கம் கொள்ளாதவர்கள்.
பிறருக்கு உதவி செய்யும் குணம் உள்ளவர்கள்.
நீதி, நேர்மைக்கு பயந்தவர்கள். நம்பியவரை மோசம் செய்யாதவர்கள்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் தனக்கென
வசதி வாய்ப்புகளை தேடிக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள்.
ஆனால் இதில் பெரும் ஆசை கொள்ளாதவர்கள்.
வரும் போது வரும் என்று வேதாந்தம் பேசுபவர்கள்.
அளவான வாழ்க்கையை விரும்புவார்கள்.
பாசவலையில் சிக்கி தவிப்பவர்கள் இவர்களே.