யம் லப்தவா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத!
யஸ்மினஸ்திதோ ந துக்கேன குருணாபி விசால்யதே !!
எது கிட்டியபின், அதற்கும் மேலான பலன் இல்லையென்று நினைக்கின்றாரோ
எதில் நிலைத்த பிறகு எப்படிப்பட்ட கடுமையான துக்கம் வந்தாலும்
அசையாமல் சலிக்காமல் இருக்கின்றாரோ.
தம் வித்யாத்துக்கஸம்யோகவியோகம் யோகஸம்ஞிதம்!
ஸநிஸ்சயேனயோக்தவ்யோயோகோ ஸ நிர்விண்ணசேதஸா!!
அது துக்கத்தின் சேர்க்கையிலிருந்து விடுபட்டதான யோகம் என்று பெயருள்ளதென அறியப்படட்டும்.
இந்த யோகம் திடமான தீர்மானத்துடன் பழக்கப்படவேண்டும்.
எப்பிணியும் துக்கமே,
துக்கத்தை தடுக்கும் வழி யோகம்.
துக்கத்தைத் தடுக்கிறவனே,
தடுத்தவனே யோகி!