4 – 7 – க்குடைய குரு மிகவும் பாதிப்பைத் தருவார் என்றும் குரு நின்ற வீட்டின் அதிபதி, குருவிற்கோ, லக்கினத்திற்கோ, அல்லது சந்திரனுக்கு 5 – 9 – ல், இருப்பின் லட்சுமியே வீட்டில் வாசம் செய்வாள். மனையில் தெய்வம் உண்டு என ஆணித்தரமாக சொல்கிறார் ” புலிப்பாணி முனிவர். இது மறுக்க முடியாத உண்மை, உண்மையே.. சுக்கிரன் – புதன் – சனி ஆகியவர்கள், செவ்வாய் – சூரியன் – குரு ஆகியோரின் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரத்திற்கு 3-5-7-ல் இருப்பின், சனி தசாபுத்தி காலங்களில் கண்டம் –விபத்து – நோய்த்தொல்லை, சொத்துக்களை இழத்தல், மாரகம் போன்ற பாதிப்புகள் நிச்சயம். சந்திரன், கன்னி லக்கினத்தாருக்கு ‘சுபர் ,பாவர்’ என்ற வரிசையில் பெறாமல் சமநிலையில் செயல்படுகிறார். பாவர்கள் என்று சொல்லப்படும் சூரியன் –செவ்வாய் – குரு ஆகியவர்கள் 3-6-8-12–ல், இருந்த, சனி, சுக்கிரன், புதன், சந்திரன், ராகு, கேது தனப்பிராப்தியும் பெரிய முன்னேற்றங்களையும் தந்து, கடைசியில்“ஓட்டாண்டியாக” நிற்க வைப்பார்கள். இந்த கன்னி லக்கினக்காரக்களுக்கு பெண்களாலேயே யோகமும், பின் தரித்திரமும் வரும், பெற்ற அன்னை (அ) சிற்றன்னையின் அரவணைப்பு குறைந்து, அவர்களே பகைவர்களாக மாறி செயல்படும் விந்தையான அமைப்பு இவர்களுக்கே உரியது, கவர்ச்சியான உடல் அமைப்புடன் சிரித்துப்பேசி வசீகரிக்கும் தன்மையும் கொண்ட இவர்கள் இல்லறத்தில் இன்பம் பெறுவது கடினமே, கடினமான குணம் கொண்ட மனைவி (அ) மாமியார் – மாமனாரால் தொல்லைகள் பல பெறும் கன்னி லக்கினத்தாருக்கு சுகமான வாழ்வு அல்லது மிதமான சொத்து, சொகுசுவாகனம் – நாகரிக ஆடையாபரணம் ஆகியவைகளுக்கு குறைவிருக்காது. மேலும் இந்த லக்கினத்தாருக்கு சனியுடன், புதன்- சுக்கிரன் – ராகு – கேது சேர்க்கை (அ) பார்வை இருப்பின் நலமான யோகம் கண்டிப்பாக உண்டு. சூரியன் – புதனுடன் குரு சம்பந்தம் பெற்றாலோ, ( அ ) குரு நின்ற வீட்டின் அதிபதி கெட்டு விட்டாலோ,கேந்திராதி பத்தியம் கிடையாது. ‘கஜகேசரி யோகம்’ ‘சசிமங்களயோகம்’ ‘குருமங்கள யோகம்’ ஆகியவைகள் நன்மை தருவதில்லை. சுக்கிரன் புதன் சேர்க்கையான தர்ம கர்மாதிபதி யோகம், 1,5-ல் சந்திரன் அமைந்து, சூரியன் – செவ்வாய் – ராகு – கேது இன்றி சந்திரனுக்கு 2-12-ல் மற்ற கிரகங்கள் இருந்து தரும் அனபா சுனபா யோகம் எவ்விதத்திலாயினும் யோகங்களைத் தந்திடும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaFebruary 24, 2021Leave a commentTags: கேதுசந்திரன்சனிசுக்கிரன்சுபர்பாவர்புதன்புலிப்பாணிமுனிவர்ராகுலட்சுமி Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்னம்.1NextNext post:கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு கன்னி லக்கினம் 3Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 8October 5, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 7October 4, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 6October 3, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 5October 2, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 4October 1, 2024கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 3August 31, 2024