மீனம் :-
“மீன மகனை விடேல்” என்ற இந்த ராசி, இரண்டு மீன்கள் தலைமாறி இருப்பதை
போன்ற அமைப்புடைய இந்த ராசி கால புருஷனின் கடைசி ராசியாகும்.
உபயராசி இரட்டை ராசி என்று அழைக்கப்படும்
பெண் ராசி கௌரவமும் தன் அடக்கமும் கொண்டது. நீர் தன்மையுடையது.
அதிக கற்பனை வளம்
அரசியலில் வெற்றியினை தரும் அதிக அளவு சுயநலம் கொண்டது. இதன் அதிபதி குருவாகும்.
தென் முக ராசியில் கடைசி ராசி பயனுள்ள ராசி.
ஆனால் மௌனமானதும் கூட நினைத்ததை அடைய அதிக பிரயாசை தேவைப்படாது.
அதிக அளவு கண்ணியமும் வேகமும் மிக்கது.
இது வான மண்டலத்தில் 330 பாகை முதல் 360 பாகை வரை வியாபித்து உள்ளது.
இந்த ராசி இரு கால் ராசியாகும்.
வடக்கு திசையை குறிக்கிறது. சத்துவ குணம் உடையது
குருவிற்கு ஆட்சி வீடாகவும் சுக்கிரனுக்கு உச்ச வீடாகவும் புதனுக்கு நீச்ச வீடாகவும் இது அமைகிறது.
சந்திரன், சனி சமம், சூரியன், செவ்வாய், ராகு, கேது நட்பு என்னும் அந்தஸ்தை பெறுகிறது.
முதல் 10 பாகை முதல் திரிகோணம்
ஆண் தன்மை உடையது. நீரில் மிதப்பது போன்றது. குருவின் தன்மை உடையது.
இரண்டாவது 10 பாகை பெண் தன்மை உடையது.
நன்கு அமர்த்தப்பட்டது சந்திரனுடையது.
மூன்றாவது 10 பாகை மூன்றாவது திரிகோணம்
ஆண் தன்மை கொண்டது. பாம்பின் அமைப்பு உடையது. அதிபதி செவ்வாய்.
1 பாகை 4 பர்லாங்குகளை குறிக்கும்.
கிணறுகள், ஆறுகள், குட்டைகள், நீர் இயந்திரம், குழாய் முதலியவைகளை குறிக்கும்.