தனுசு:- “வில்லானை சொல்லால் வளை” என்ற இந்த ராசி, அம்பு எய்யும் அமைப்பை போல் வான மண்டலத்தில் தோன்றும். இந்த ராசி காலபுருஷனின் ஒன்பதாவது ராசி ஆகும். இது 240 பாகை முதல் 270 பாகை வரை வியாபித்துள்ளது. இதன் அதிபதி குருவாகும். உபய ராசியாகிய இது ஒற்றை ராசி எனப்படும். ஆண் ராசி ஆகும், நெருப்பு தன்மையுள்ள இந்த ராசி வேகத்தையும், விபரீதத்தையும் உடையது. தென் முக ராசிகளில் மூன்றாவதாக வருவது, ஆண்மை, வைராக்கியம் மிகுந்த ஊக்கமும், தர்மத்தில் நாட்டமும் பற்றும் கொண்டது. அரை பயன் தரும் ராசிகளில் இதுவும் ஒன்று. சஞ்சலமும் விட்டுக் கொடுத்தலும் இயற்கையான தன்மை சத்துவ குணம் உடையது. சிரிஷ்போதய ராசி இரவில் சீற்றமும் அதிக பலமும் மிக்கது. இந்த ராசி கிழக்கைக் குறிக்கிறது. இந்த ராசியில் எந்த கிரகமும் பகை பெறுவதில்லை. உச்சமோ, நீச்சமோ அடைவதில்லை, குருவின் ஆட்சி வீடு கூடவே மூலத் திரிகோண வீடும் ஆக அமைகிறது. சூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகு, கேது நட்பு என்ற அமைப்பும் மற்ற கிரகங்கள் சம பலமும் பெறுகின்றன. முதல் 10 பாகையாகிய முதல் திரிகோணம் ஆண் தன்மை, நாற்கால் ஜீவன் குதிரை உடல் போன்றது ஆயுதம் தாங்கியது. அதிபதி குரு, இரண்டாவது 10 பாகை இரண்டாவது திரிகோணம் பெண் தன்மை அதிபதி செவ்வாய். மூன்றவாது 10 பாகை மூன்றாவது திரிகோணம் ஆண் தன்மை உடையது. ஆயுதம் தாங்கியது அதிபதி சூரியன். 1 பாகை 4 பர்லாங்கை குறிக்கும். குதிரை லாயம், குன்று, மேட்டு நிலம், பூசை அறை, பணம் வைத்திருக்கும் அறை முதலியவற்றை குறிக்கும். Category: கோள்களின் கோலாட்டம்By admin@powerathmaOctober 28, 2020Leave a commentTags: DIVINEPOWER AATHMAA .COMகுருகோள்களின் கோலாட்டம்தனுசு Share this post Share on FacebookShare on Facebook TweetShare on Twitter Share on WhatsAppShare on WhatsApp Author: admin@powerathma https://divinepoweraathmaa.com Post navigationPreviousPrevious post:இரும்பிலி (Diospyros ferrea)NextNext post:கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.4 ராசிகளும் அதன் தன்மைகளும் மகரம்:-Related Postsகோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 18March 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 17February 20, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 16February 19, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 15February 18, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 14February 17, 2025கோள்களின் கோலாட்டம் -1.28- 6 – ஆம் பாவத்தின் முக்கிய விதிகள் 13February 16, 2025