நமது மதத்தைத் தவிர மற்ற பெரிய மதங்கள் அனைத்தும் இத்தகைய வரலாற்று மனிதர்கள் மீதே அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் நமது மதம் தத்துவங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
வேதங்களை உருவாக்கியதாக எந்த ஆணோ பெண்ணோ உரிமைபாராட்ட முடியாது.
அவை என்றும் அழியாத உண்மைகளின் திரண்ட வடிவமாகும்
ரிஷிகள் அவற்றைக் கண்டுபிடித்தார்கள்.
வேதங்களில் அந்த ரிஷிகளின் பெயர்கள் வெறும் பெயர்கள் மட்டுமே இங்குமங்குமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது நமக்குத் தெரியாது.
பலருடைய தந்தையின் பெயர் இல்லை ;
அவர்கள் எப்போது எங்கே பிறந்தார்கள் என்ற குறிப்புகூட பெரும்பாலும் இல்லை.
அவர்கள், அந்த ரிஷிகள் தங்கள் பெயரைப்பற்றிக் கவலைப்பட்டார்களா என்ன
அவர்கள் உண்மைகளைப் போதித்தார்கள்
தங்கள் போதித்த உண்மைகளுக்கு,
தங்களால் இயன்ற அளவு உதாரணமாக விளங்கினார்கள்.