விசித்திரம் என்னவென்றால் அத்தகைய மதங்களாகிய கட்டிடம் அவர்களது வாழ்க்கையின் வரலாற்று
ஆதாரம் என்ற அஸ்திவாரத்தின் மீதுதான் முற்றிலும் கட்டப்பட்டுள்ளது
அந்த வரலாற்று ஆதாரத்தில் மட்டும் ஓர் அடி விழுமானால்,
பாறை போன்ற அஸ்திவாரம் என்று பெருமைப்பட்டுப் கொள்கிறார்களே அது மட்டும் அசைக்கப்படுமானால்,
தூளாக்கப்படுமானால் முழுக்கட்டிடமுமே நொறுங்கிக் சுக்கல் சுக்கலாகி விடும்.
அவை மீண்டும் பழைய பெருமையைப் பெறுவதே இல்லை.
இன்று அப்படித்தான் நடைபெறுகிறது.
அத்தகைய மதங்களைத் தோற்றுவித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றில்
பாதி நிச்சயமான உண்மை என்று நம்பப்படவில்லை
மீதிப் பாதியும் தீவிரமான சந்தேகத்திற்கு உரியதாகக் கருதப்படுகிறது.