இதை “ காலன் “ என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றார்கள். இது சரியான பெயர்!
இதை பய பக்தியாய் கவனிக்காவிட்டாலோ, கால ( யம ) னிடத்தில் கண்டிப்பாய் சேர்த்துவிடும் என்ற அர்த்தமிருப்பதால்
இப்பாகத்தை நாமும் “ காலன் “ என்றே அழைப்போம்.
இதைப் பல பாகங்களாகப் பிரிக்கிறார்கள்.
ஒவ்வொன்றுக்கும் தொழிலும் அமைப்பும் மாறுபடும்
சீகம், ஏறு, இறங்கு காலன் குறுக்குக்காலன், சிக்மாய்ட் ( SIGMOID ) என்ற பாகங்கள்
கடைசி பாகம், ரெக்டம் அல்லது மலக்குழாயில் சேர்ந்து மலம் வெளிப்போகும் குழாயுடன் ( ANUS CANAL ) முடிகிறது.