உலக மோகங்களின் மீதான நம்முடைய பற்றும், மற்றும் நமது இச்சைகளும்
எந்த அளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு அதிகமாக மரணபயமும் இருக்கும்
பற்றுகளும், இச்சைகளும் குறைவாக இருக்க அல்லது குறைக்க உண்டான வழியை கண்டு பிடித்து
அதன் வழியே நாம் பயணித்தால் மரண பயத்தின் அளவை குறைக்கலாம்
முயன்றால் இல்லாமல் கூட செய்துவிடலாம்.
பயத்தினால் மாறி எதுவும் நடந்துவிட போவது இல்லை
வாழ்வு எப்படி யதார்த்த உண்மையோ அது போலவே மரணமும் யதார்த்த உண்மை
இந்து மத கோட்பாடின் படி மரணத்திற்கு பின் வரும் மறுமையும் உண்மை
இதை புரிந்து கொண்டால் மரணபயம் நம்மை வாட்டாது.
ஆனால் புரிந்து தெளிவது சற்று கடினமே.