சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது திருத்தளிநாதர் ஆலயம்.
வான்மீகி முனிவருக்கு அருள் வழங்கிய ஆலயமாகவும், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் போன்றவர்களால்
பாடல்பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது.
சிவபெருமானின் கவுரி தாண்டவத்தைக் காண்பதற்காக மகாலட்சுமி தவம் இருந்த இடமும் இதுவே ஆகும்.
பைரவ மூர்த்தங்களில் முதன்மையான ஆதி பைரவர் தோன்றிய அருட்தலமும் இதுதான்.