இதுதான் ராஜராஜன் உடனடி படையெடுப்புக்கான காரணமாக சொல்லப்படுகிறது.
ராஜராஜனுக்கும் பாஸ்கரரவிவர்மாவுக்கும் இடையிலான இப்போர் கடற்போராக இருந்தது எனவும் சொல்லப்படுகிறது.
திருவனத்நபுரம் கடற்கரைக்கு அருகில் நடந்த இப்போரில் ராஜராஜன் சாலைகலை மறுத்தருளிய
கோவி ராஜராஜகேசரி என்ற கல்வெட்டு ஆதாரத்தின்படி கலம் அறுத்து என்பதை கப்பல்களை வீழ்த்தி என அறிந்துகொள்ளலாம்
இப்போரில் ராஜராஜன் மாபெரும் வெற்றிபெற்றார்
காந்தளூர் சாலை போர் குறித்தான விவாதங்கள் இனறுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது
காந்தளூர் சாலை என்பது ஒரு கடற்கரை நகரம் என்றும்,
இப்போர் கப்பற்படைகளுக்கு இடையில் நடந்தது எனவும் சொல்லப்படுகிறது
இது பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.