மரண லக்ஷணம் ….. இரவில் சந்திர பிம்பத்தைக் காட்டினால் இரண்டு சந்திர பிம்பங்கள் இருக்கிறதென்றும் அல்லது பகலில் சந்திரி, சூரியர்கள் இருக்கிறார்கள் என்றும் இரவில் நக்ஷத்திரங்கள் தென்பட வில்லை என்றும் சிவப்பெருமான் தென்படுகிறறென்றும் மலையின் மேல் கந்தருவர்கள் பாடுகிறார்களென்றும் நாகலோகம் அதோயிருக்கிறதென்றம் சொல்லுவான் இவ்விகாரங்கள் பஞ்சதத்துவங்களின் ( பஞ்ச பூதம் ) கெடுதலினால் உண்டானது இவன் சீவிக்கமாட்டான் என்று அறியவும்.
ஒரு வாரத்தில் நோய் நிவர்த்தி குறி ….. மனிதர்களுக்கு புரட்டாசி மாதத்தில் உத்திர நக்ஷத்திரத்தில், தைமாத உத்திர நக்ஷத்திரத்திலும், பங்குனிமாதத்தில் ரோகிணி, புனர்பூச நக்ஷத்திரத்திலும் ரோகங்கள் உண்டானால் ஒருவாரத்திற்குள்ளாக நோயானது நீங்கிவிடுகின்றது.
இவ்விஷயம் சந்தேகமன்றி நடக்குமென்றும் கர்கருஷியால் சொல்லப்பட்டு இருக்கிறது.