அசாத்திய லக்ஷணம் ….. வாதமானது பித்த ஸ்தானத்திலும், பித்தமானது கபஸ்தானத்திலும், கபமானது கண்டஸ்தானத்திலும் இருக்குமாகில் அகத்தியம் மரணம் சம்பவிக்கும். மேலும் இரவில் அதிகதாஹமும், பகலில் சீதளமும் கண்டத்தில் ( தொண்டையில் ) கோழை கட்டுதலும் ஹீனசுரமும் அதிகபேதியும் சுவாசத்துடன் கூடிய இருமலும், விக்கலும், பக்கசூலையும், உதரசூலையும் முதலிய துர் ரோகங்கள் இருந்தால் அவன் பிழைக்கமாட்டான்.
இரண்டாவது விதம் ……. மார்பு, கால், கைகள், நாசிகை முதலியது சீதலமாயும், சிரசு மாத்திரம் கொதித்துக் கொண்டிருந்தால் அந்த ரோகி ஜீவிக்கமாட்டான்.
மூன்றாவது விதம் …… தேகம் பலவித சாயலாயும் காச சுவாசத்துடன் வாந்தியும் ருசி வாசனை இன்மையும் தேகத்தின்மேல் துர்நாற்றமும் ஞாபகசக்தி இன்மையும் உடைய ரோகி மரணமடைவான்.