திருவள்ளூர் மாவட்டம், திருஇலம்பையங் கோட்டூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் ஆலயம்.
இங்கே மேற்கு நோக்கி, தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீரம்பாபுரி நாதர்
16 ஒளிப்பட்டைகளுடன் கூடிய லிங்கத்திருமேனியராக அருள்வது, விசேஷ அம்சம்.
இவரைத் தரிசித்து வழிபட்டால்
பதினாறு பேறுகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.