நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு எதையும் செய்யவில்லை, என்ற அவர்களுடைய இந்த வாதத்தைவைத்துக் கொண்டே
நாம் நமது மதத்தின் சிறப்பை உறுதி செய்யலாம் என்பதை அவர்கள் உணரவில்லை.
நமது மதம் மட்டுமே உண்மையான மதம்.
ஏனெனில் மூன்று நாட்களே நிலைப்பதும்
புலன்களால் உணரப்படுவதுமான இந்தச் சின்னஞ்சிறு உலகை
வாழ்வின் அனைத்துமாகக் கொள்ளக் கூடாது,