ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அரசியல், அதாவது சமுதாய முன்னேற்றம்,
அதாவது இந்த உலகம் தான் மேலை நாட்டினரின் லட்சியம்.
கடவுள், மதம் என்பதெல்லாம் அந்த லட்சியத்தை அடைவதற்காக உதவுபவை, அவ்வளவுதான்.
அவர்களே இன்னும் கற்க வேண்டியுள்ளது,
இதில் நம்மை விடத் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள்.
கடந்த நூறு இருநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திய மதத்திற்கு எதிராக
அவர்கள் கூறிவருவதெல்லாம் என்ன தெரியுமா ?
நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆவன செய்யவில்லை,
அது நமக்கு காசு பணங்களைத் தரவில்லை,