வளர்ந்துவிட்ட பெரிய மரத்தை ஓர் இடத்திலிருந்து பிடுங்கி மற்றோர் இடத்தில் நட்டு,
உடனடியாக அது அங்கே வேர் பிடித்து வளரும்படிச் செய்ய உங்களால் முடியாது.
நல்லதற்கோ கெட்டதற்கோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில்
மத லட்சியம் நிறைந்து பரவிக் கொண்டிருக்கிறது
நல்லதற்கோ கெட்டதற்கோ இந்தியச் சூழ்நிலை
மத லட்சியங்களால் நிரப்பப்பட்டு எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒளிவீசி வருகிறது
நல்லதற்கோ கெட்டதற்கோ நாம் இந்த மத லட்சியங்களுக்கு நடுவிலே பிறந்து வளர்க்கப்பட்டு இருக்கிறோம்
அவை நம் ரத்தத்தோடு கலந்து, ரத்தக்குழாயில் ஓடுகின்ற ஒவ்வொரு துளியிலும்
சிலிர்ப்பை ஊட்டி நம் உடம்போடு ஒன்றிப்போய் இருக்கிறது
; நம் வாழ்வின் ஆதாரமாக சக்தியாக ஆகியிருக்கிறது.