சாதாரண இந்தியர்கள் பல விஷயங்களை அறியாதவர்களாகவும்
புதிய செய்திகளை அறிவதில் ஆர்வம் இல்லாதவர்களாகவும்
இருப்பதைக்கண்டு ஒரு காலத்தில் நான் வெறுப்படைந்தது உண்டு.
இப்போது அவர்களின் போக்கிற்கான காரணம் எனக்குப் புரிந்துவிட்டது
அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அதைப் பற்றிய செய்திகளை அறிவதில் ,
என் பயணத்தில் நான் கண்ட மற்ற நாட்டு மக்களைவிட அவர்கள் பேரார்வம் காட்டுகிறார்கள்.