காலத்தை வீணாக்கினால் வாழ்க்கையை
அதாவது சரியான வாழ்க்கையை இழந்து விடுவோம்
பிறகு பார்த்துக்கொள்ளலாம், நாளை செய்துகொள்ளலாம் இப்போ என்ன அவசரம் என்று
எந்த ஒரு பணியையும் தேவையில்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பவர்களை
காலம் நிச்சையம் தள்ளி வைத்துவிடும்
யாருக்காகவும் எதற்கு வேண்டியும் காத்திருக்காது காலம்.
அதனால் கற்றலோ, கற்பித்தலோ,
விளையாட்டோ, ஆலயவழிபாடோ,
தவமோ, வேலையோ
எதுவானாலும்
உரிய காலத்தே செய்து பழவோம்