அன்றைய மனிதர்கள் அப்படியில்லையென்றே தோன்றுகிறது.
ஒரு 75 வருடங்களுக்கு முன் இருந்த இந்தியர்களின் மனோபாவம் இப்போது உள்ள இந்தியர்களுக்கு இருக்கிறதா
நெஞ்சை தொட்டு சொல்லுவதாய் இருந்தால்
இல்லையென்ற பதில் தான் வரும்
ஏன்?
எதனால் நாம் அதை இழந்தோம், இழந்ததும், இழந்து கொண்டிருப்பதும்,
நமது சுயத்தை என்று நமக்கு ஏன் தெரியவில்லை.
அமெரிக்காவைப் பார், ரஷ்யாவை பார் அதை பார் இதை பார் இன்னும் என்னென்னமோ பார் என்று சொல்லி
எல்லாவற்றையும் பார்த்து நாம் நம்மை தொலைத்துவிட்டோமே.
இந்த ராம ராஜ்ஜியத்தில் சீதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதே
ராமர்களுக்கும் அதே நிலைதான்
ஏன்?
எதனால், எப்படி, இது மாறியது.
மாறக்கூடாதது மாறினால் அது அசிங்கம் அல்லவா?
அது மட்டுமல்ல, அபாயமுமல்லவா?